Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

July 30, 2026

மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

July 30, 2026

மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

July 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » முப்பத்து மூன்று வருடகால ஆசிரியர் சேவையில் நின்று பணி ஓய்வு பெறும் ஆசிரியை ஏ.ஜே.சித்தி நஸீலா
மலையகம்

முப்பத்து மூன்று வருடகால ஆசிரியர் சேவையில் நின்று பணி ஓய்வு பெறும் ஆசிரியை ஏ.ஜே.சித்தி நஸீலா

ThanaBy ThanaMarch 30, 2023No Comments3 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

முப்பத்து மூன்று வருடகால ஆசிரியர் சேவையில் நின்று பணி ஓய்வு பெறும் ஆசிரியை ஏ.ஜே.சித்தி நஸீலா.

பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) தனது மூன்று தசாப்த கால உன்னத கல்வி சேவையாற்றி பணி ஓய்வு பெறுகின்ற ஒரு பெண் ஆளுமை ஆசிரியை ஜனாபா ஏ.ஜே.
சித்தி நஸீலா அவர்கள்.

1963.03.30 அன்று அப்துல் ஜப்பார், ஒஜிதா உம்மா ஆகியோருக்கு மகவாக ஜனாபா சித்தி நஸீலா அவர்கள் பசறை ஊரில் பிறந்தார்.
இவர் தனது பாடசாலை கல்வியை பசறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்றார்.

மர்ஹும் எம்.பி.எம். ரஹீம்தீன் அவர்களுடன் இல்வாழ்வில் இணைந்தார்கள்.

1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஆசிரியர் நியமனம் பெற்ற இவர் பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது கல்வி பணியை ஆரம்பித்தார்.
அன்று முதல் இன்றுவரை சுமார் முப்பத்து மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக இப்பாடசாலையில் சேவையாற்றி பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உன்னத சேவையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

தேசிய கல்வி நிறுவகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆசிரியர்களின் வாய்மை விருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சியை தொலைக்கல்வி மூலம்
‪1995 – 1998‬ காலப்பகுதியில் நிறைவு செய்து ஆரம்ப கல்விக்கு பயிற்றப்பட்ட ஆசிரியராக தன்னை இலங்கை ஆசிரியர் சேவையில் நிலைப்படுத்திக்கொண்டார்.

இதற்கமைவாக 1990 ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலையில் ஆரம்பபிரிவின் முதன்மை நிலை ஒன்றின்
வகுப்பாசிரியராக பசறை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு வருகைதரும் மாணவர்களை அன்புடன் அரவணைத்து மாணவர் செல்வங்களின் கல்வி வளர்ச்சிக்கு நல்லதொரு அடித்தளமிட்ட
ஆசிரியப் பெருந்தகையாக ஜனாபா சித்தி நஸீலா திகழ்கின்றார்.

பசறை பிரதேசத்தில் இப்பாடசாலையில் கற்றுயர்ந்து அரச மற்றும் தனியார் துறைகளில் மிளிர்கின்ற பெரும்பாலானவர்கள் பசறை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் என்பதோடு இவர்களின் முன்னேற்றத்திற்கு முதலடி தொடங்கி வைத்த பெருமை ஆசிரியை சித்தி நஸீலாவையே சாரும்.

இப்பாடசாலையின்
இடைநிலைப் பிரிவு மாணவர்களின் நலன்கருதி 1998 ஆம் ஆண்டு
ஆரம்ப பிரிவு சேவையிலிருந்து நீக்கப்பட்டு தரம் ஆறு மற்றும் ஏழு ஆகியவற்றின் தர இணைப்பாளராக அன்றையநாள் அதிபராக கடமைபுரிந்த பழனிமுத்து ஆறுமுகம் அவர்களினால் நியமிக்கப்பட்டார். அத்தோடு குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், கணிதம் ஆகிய பாடங்களை போதித்ததுடன் க.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு மனைப்பொருளியல் பாடத்தையும் போதித்து மிகச்சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றினார்.
மனைப்பொருளியல் பாடதுறையில் அர்ப்பணிப்பு அர்ப்பணிப்புமிக்க சேவை காரணமாக அன்று தொடக்கம் இன்றுவரை பாடசாலையில் நடைபெறும் அனைத்து சிறப்பு நிகழ்வுகளின்போதும் உபசரணை குழுவில் நியமிக்கப்பட்டார். இயல்பிலேயே விருந்தோம்பல் குணம் கொண்ட இவர் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை செவ்வனே நிறைவேற்றுவதில் சிறந்தவர் ஆவார். ஆரம்ப பிரிவுக்கான சத்துணவு செயல்திட்டத்திற்கா இவரது நேர்த்தியான பங்களிப்பு அன்றைய கல்வி அதிகாரிகளினதும் பாராட்டுதல்களுக்கும் இலக்கானமையும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட இரண்டு மூன்று வருடங்கள் இடைநிலை பிரிவில் சேவையாற்றி மீண்டும் ஆரம்ப பிரிவுக்கு மாற்றப்பட்டதுடன் 2012 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட சிலவருடங்களாக ஆரம்ப பிரிவின் பகுதித்தலைவராக செயலாற்றினார்
.
தனது சேவை காலத்தில் அதிக காலம் ஆரம்ப பிரிவு முதன்மை நிலை ஒன்றில் வகுப்பாசிரியராக கடமையாற்றியதாக குறிப்பிடும் இவர் 2012 ஆம் ஆண்டு மாத்திரம் தரம் ஐந்து வகுப்பாசிரியராக கடமையாற்றியதாக குறிப்பிட்டார்.

இயல்பிலேயே சற்று கண்டிப்பான குணமிக்க ஆசிரியை ஜனாபா சித்தி நஸீலா பாடசாலை மாணவர்களது குறிப்பாக மாணவியர்களது ஒழுக்க விழுமியங்களைக் காப்பதில் மிக சிறந்தவர். அத்துடன் பாடசாலைக்கு நியமனம் பெற்று வருகின்ற இளம் ஆசிரியர்கள் அனைவரையும் சிரேஷ்ட ஆசிரியர் என்றவகையில் வழிப்படுத்துவதிலும் திறன்மிக்கவர் ஆவார்.
ஆசிரியர்களின் தேவைக்கருதி ஏனைய இளம் ஆசிரியர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை ஆற்றியுள்ளார்.
குறிப்பாக வேறு மாகாணங்களிலும் தூர இடங்களிலிருந்தும் நியமனமாகிவரும் ஆசிரியைகள் இவரது விருந்தோம்பலை அனுபவித்திருப்பர் என்பதே நிதர்சனம்.

வறிய மாணவர்களை இனங்கண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுலதோடு இச்செயலை
இரகசியமாக காம்போடு கண்ணியமாகவும் நிறைவேற்றிக் கொடுப்பார்.

தனது சேவைக்காக த்தில் சேவையாற்றிய பசறை தமிழ் தேசிய பாடசாலையில் தலைமை வகித்த நான்கு அதிபர்களின் கீழ் குறிப்பிட்ட மூன்று தசாப்தங்களிலும் இப்பாடசாலை வரலாற்று திருப்பங்களில் பாடசாலை எதிர்நோக்கிய அத்தனை சவால்களையும் வெற்றிக்கொள்வதில் இவரது காத்திரமான பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமுமில்லை.

தனது கணவரின் இழப்பிற்கு பின்னர் தனிப்பட்ட
வாழ்வில் இவர் எதிர்நோக்கிய பல தனிப்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி தனது இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி திருமண வாழ்வில் கரம்கோர்க்க செய்து குடும்பத்தில் நல்லதொரு அன்னையாக திகழும் இவர் தான் சேவையாற்றிய காலப்பகுதியில் ஓர் ஆசிரியராக தனக்கு வழங்கப்பட்ட எல்லா பொறுப்புகளையும் செவ்வனே நிறைவேற்றிய பெருமனதோடு
உன்னத கல்விச்சேவையிலிருந்து கௌரவமாக 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதியன்று
ஓய்வுபெறுகினற ஆசிரியை
அப்துல் ஜப்பார் சித்தி நஸீலா அவர்களின் பணி ஓய்வு காலம் இனிதே அமைந்திட வேண்டுமென பசறை பிரதேச கல்வி சமூகத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

( தகவல் – மொஹம்மட் இர்ஷாட் )

நடராஜா மலர்வேந்தன்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026
    Editors Picks

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.