கந்தகெடிய 3 ம் பிரிவு வெல ஓய ஆற்றில் 44 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கந்தகெடிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் மீட்கப்பட்ட சடலம் காணாமல் போன நபராக இருக்கலாம் என கந்தகெடிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ராமு தனராஜா.
