மத்திய மாகாணம்- மாத்தளை மாவட்டம் மாத்தளை, குமரமலை – அருள்மிகு குமரப் பெருமான் திருக்கோயில்

குமரமலை மீதமர்ந்த மாமணியே குமரேசா
குறையில்லா நிறை வாழ்வை தரவேண்டும்
குற்றங்கள் நெருங்காது துணை இருப்பாய்
மாத்தளையில் கோயில் கொண்ட எங்கள் பெருமானே

மலை உச்சி மீதுறையும் மாமணியே குமரேசா
மாசண்டா மனத்தினையே தரவேண்டும்
மகிழ்ச்சி கொண்டு நாம் வாழத் துணை இருப்பாய்
மாத்தளையில் கோயில் கொண்ட எங்கள் பெருமானே

குஞ்சரத்தின் முகம் கொண்டோன் இளையவனே மாமணியே குமரேசா
அச்சமில்லா மனவலிமை தரவேண்டும்
இச்சைகள் நெருங்காது துணை இருப்பாய்
மாத்தளையில் கோயில் கொண்ட எங்கள் பெருமானே
தஞ்சமென்று தாள்பணிவோர் துணையிருக்கும் மாமணியே குமரேசா
நெஞ்சமதில் நிம்மதியைத் தரவேண்டும்
வஞ்சனைகள் நெருங்காது துணை இருப்பாய்
மாத்தளையில் கோயில் கொண்ட எங்கள் பெருமானே
வாஞ்சையுடன் எமக்கருளும் மாமணியே குமரேசா
வழிகாட்டி நெறிப்படுத்தி நல்வழியைத் தரவேண்டும்
வேதனைகள் நெருங்காது துணை இருப்பாய்
மாத்தளையில் கோயில் கொண்ட எங்கள் பெருமானே
சேவற் கொடிஉடன் கொண்டு காட்சிதரும் மாமணியே குமரேசா
சேருமிடம் சேமமுற உரியவழி தரவேண்டும்
சோர்வெம்மை நெருங்காது துணை இருப்பாய்
மாத்தளையில் கோயில் கொண்ட எங்கள் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
