காஷ்மீர்- இமாச்சல மலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஐந்து இந்திய இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.
இத் தாக்குதலில் மேலும் பல இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடும் மழை மற்றும் பனியுடனான வானிலை நிலவும் குறித்த பகுதியில், இராணுவத்தினர் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அடையாளம் காணப்படாத தீவிரவாத கும்பலொன்றால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இந்தியப் பாதுகாப்பு பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
