Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026

நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தெளிவத்தை ஜோசப் ஆய்வு மற்றும் ஆவணவகம் வத்தளையில் திறந்து வைப்பு
இலங்கை

தெளிவத்தை ஜோசப் ஆய்வு மற்றும் ஆவணவகம் வத்தளையில் திறந்து வைப்பு

ThanaBy ThanaDecember 4, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மறைந்த எழுத்தாளர் சாகித்ய ரத்ன தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஆய்வு மற்றும் ஆவணவச் சேகரிப்பு பணிகளை கௌரவிக்கும் வகையிலும் அதனை ஊக்குவிக்கும் வகையிலும் பாக்யா பதிப்பகம் முன்னெடுக்கும் நிலைபேறான நினைவேந்தல் திட்டமாக ‘தெளிவத்தை ஜோசப் ஆய்வு மற்றும் ஆவணவகம்’ ( Theliwatte Joseph Reserch and Documentation Centre ) வத்தளையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தெளிவத்தை ஜோசப் அவர்களின் துணைவியார் திருமதி. பிலோமினாள் ருபெல்லா ஜோசப் அம்மையாரின் கரங்களினால் திறந்து வைக்கப்பட்ட நிலையத்தின் பணிகளை பாக்யா பதிப்பகம் முகாமைச் செய்யவுள்ளதாக அதன் நிறுவுனரும் எழுத்தாளருமான மல்லியப்புசந்தி திலகர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த அவர்,

“தெளிவத்தை ஜோசப் அவர்கள் தனியே எழுத்து, இலக்கியம் என்பதற்கு அப்பால் ஆய்வு மற்றும் ஆவணம்க்கல் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். அவர் வாழ்ந்த காலத்திலேயே பல ஆயிரக் கணக்கான நூல் சேகரிப்புகளை கொழும்புத் தமிழ்ச்சங்கத்துக்கு வழங்கி இருந்தார்.

அவர் இறக்கும் தறுவாயில் அவரது சேகரிப்பில் இருந்த ஆயிரம் புத்தகங்களையும் அவரது விருதுகளையும் பாக்யா பதிப்பகத்தின் இந்த தெளிவத்தை ஆய்வகத்தில் காட்சிப்படுத்தியுள்ளோம். காட்சிப்படுத்திப்பட்டுள்ள நூல் விபரங்களை விரைவில் விபரமாக பதிவிடவுள்ளோம். அந்த நூல் தேவைப்படுவோர் நிலையத்துக்கு வருகைதந்து பிரதி எடுத்துச் செல்லக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அவற்றை எண்ணிம்ப்படுத்தும் பணிகளையும் ஆரம்பிக்க உள்ளோம். ஆண்டுதோறும் அவரது நினைவாக ஆய்வுக்கட்டுரை போட்டிகளை நடாத்தும் ‘தெளிவத்தையார் விருது’ ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்வின்போது கனடா ‘தாய்வீடு’ மாதப்பத்திரிகை 2022 டிசம்பர் மாதம் வெளியிட்டுள்ள ‘தெளிவத்தையார் சிறப்பிதழ்’ பிரதிகளும் வெளியிட்டு வைக்கப்பட்டன. நிலையத்தின் முகவரி 204-1/D, முதலாவது தளம், எவரிவத்தை வீதி, வத்தளை. தொலைபேசி 011-2982998. முன்பதிவுகொள்வதன் மூலம் நிலையத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

    October 7, 2026

    ஞானசார தேரரை காரில் ஏற்றிச் சென்ற வங்கி அதிகாரி கைது: அக். 9 வரை விளக்கமறியல்!

    October 7, 2026
    Editors Picks

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.