மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் மற்றுமொரு மகத்தான செயற்திட்டம் நேற்றைய தினம் சாமிமலை தெய்வகந்தை தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் தலைவர் திரு.சிங்கராஜ் அவர்களின் வழிக்காட்டலின் கீழ், அவ்வமைப்பில் பயணிக்கும் பதுளை மாவட்ட இணைப்பாளரும் ஆரம்பகால உறுப்பினருமான திருமதி.ஜெயந்தி அவர்களின் கணவர் திரு.ஜெயகுமார் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு, சாமிமலை தெய்வகந்தை தமிழ் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டதோடு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
அத்தோடு அமைப்பில் கௌரவ செயலாளராக செல்வி.லதா அவர்களும், உபதலைவராக திரு சிவகுமார் அவர்களும் பதவியேற்று ஒராண்டு பூர்த்தி ஏய்தியுள்ளார்கள்.

அவர்களது சிறப்பான சேவையை பாராட்டி உபதலைவர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

