கண்டியில் உயர்தர பாடசாலை ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் பாடசாலை கட்டிடத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி இப்பாடசாலையில் 10 ம் ஆண்டில் கல்வி கற்பவர்
எனவும் மாணவி 15 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி ஒரு மாணவர் தலைவி எனவும் கட்டுகஸ்தோட்டை களுகமுகவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் பற்றி கட்டுகஸ்தோட்டை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மடுல்கலை நிருபர்
