ஊவா மாகாண பசறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தொலம்போவத்த கிராம அலுவலக பிரிவில் கடந்த 2015.01.08 முதல் 2023.05.06 வரையான காலப்பகுதியில் தொலம்போவத்த பகுதியில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக சேவையாற்றிய மூக்கன் புனிதராஜா கடந்த காலங்களில் இப்பகுதி மக்களின் தேவையறிந்து சேவையாற்றியதோடு தொலம்போவத்த கிராம அபிவிருத்தி செயற்றிட்டங்களையும் சமூக சேவை நிகழ்ச்சி திட்டங்களையும் செவ்வனே நிறைவேற்றியவராக திகழ்ந்துள்ளார்.

அண்மையில் இடமாற்றம் பெற்றுச் சென்ற சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் புனிதராஜாவிற்கு தொலம்பேவத்த கிராம மக்கள் இன்று (17) நந்தாராம விகாரை மண்டபத்தில் வெகுசிறப்பாக பிரியாவிடையளித்து கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் பசறை பிரதேச செயலாளர் திருமதி என்.ஜே.டி. அநுராதா , உதவி பிரதேச செயலாளர் திருமதி எச்.எம்.ஏ.எஸ்.ஹேரத், சமூர்த்தி முகாமையாளர் திருமதி மதுமதி ஹேமலதா மற்றும் நந்தராம விகாரதிபதி உபதிஸ்ஸ தேரர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் , கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மத அனுஷ்ட்டானத்தோடு ஆரம்பமாகிய இந்நிகழ்வில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மூக்கன் புனிதராஜாவிற்கு கிராம் மக்கள் பொன்னாடைப்போர்த்தியும் ஞாபக சின்னம் வழங்கியும் கௌரவித்ததோடு உன்னத மக்கள் இனிதே தொடரவேண்டுமென மனதார வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நடராஜா மலர்வேந்தன்

