மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.22.05.2023.
நோட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள திபட்டன் லக்க்ஷபான தோட்டத்தில் சுமார் 150 குடும்பங்கள் கடந்த 200 ஆண்டு காலமாக பாட்டன், பாட்டி, தாத்தா, அம்மாய், தந்தை, தாய் பிள்ளைகள் என நான்கு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 198 வருடமாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மரணம் அடைந்தாள் அவர்களின் இறுதி கிரியைகள் நடத்த இலகுவான இடம் ஒன்றை அக்காலத்தில் உரிமை வகித்த வெள்ளையர்கள் வழங்கி இருந்தனர்.
அதன் பின்னர் பொறுப்பேற்ற இஸ்லாமியரும் கூட அதே இடத்தில் இறுதி கிரிகை நடத்த எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
தற்போதைய நிர்வாகம் அந்த இடத்தில் இறுதி கிரிகை நடத்த கூடாது என கூறி கடந்த வருடம் ஒரு பெண் தொழிலாளி மரணித்த போது பிரேதத்தை காலம் காலமாக இறுதி கிரிகை செய்த இடத்தில் செய்ய வேண்டாம் என கோரிக்கை முன் வைத்த போது நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உத்தரவின் பேரில் உரிய இடத்தில் கிரிகைகள் நடந்தது.
நேற்று அத்தோட்டத்தில் மீண்டும் ஒரு பெண் தொழிலாளி மரணித்த நிலையில் இன்று அவரது குடும்பத்தினர் இறுதி கிரியை செய்ய குறித்த இடத்தை தோட்ட நிர்வாகத்திடம் கேட்ட போது அவர்கள் அங்கு இடம் வழங்க மறுப்பு தெரிவித்து வேறு ஒரு இடத்தில் இறுதி கிரிகை நடத்த கூறினர்.
காணொளி 👇
https://fb.watch/kFxXCvvzDi/?mibextid=Nif5oz
அவ்வாறு வழங்க பட்ட இடம் வெகு தூரத்தில் உள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் தங்கள் சார்ந்த தொழிற் சங்க தலைவர் செல்லையா சிவசுந்தரம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அனைத்து தொடர்ந்து முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் மற்றும் செங் கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் இது தொடர்பாக தோட்ட முகாமையாளர், அம்பகமுவ பிரதேச செயலாளர் மற்றும் நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வலய பொலிஸ் அதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இருந்த போதிலும் தோட்ட நிர்வாகம் நீண்ட தூரம் உள்ள ஒரு இடத்தில் அங்கு புதைக்க குழி தோண்டி இங்கே இறுதி கிரியைகள் செய்ய வேண்டும் என பணித்து உள்ளதாக அத் தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இறந்த உடலை அடக்கம் செய்ய குறித்த நேரத்தில் செய்ய முடியாது நிலையில் பொலிசார் பணிப்புரை படி புதிய இடத்தில் இறுதி கிரிகை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
200 வருடம் அதே தோட்டத்தை பரம்பரை பரம்பரையாக கொண்ட தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி இதுவே.
