Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

November 29, 2026

பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

November 28, 2026

ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

November 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » எல்லை தாண்டி மீன்பிடித்த 5 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைது!
வெளிநாடு

எல்லை தாண்டி மீன்பிடித்த 5 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைது!

ThanaBy ThanaMay 23, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

எல்லை தாண்டி மீன்பிடித்த 5 இலங்கை மீனவர்கள் கைது; தூத்துக்குடி, தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை!.

தூத்துக்குடியை சேர்ந்த இந்திய கடலோர காவல் படையினர் ‘வஜ்ரா’ என்ற ரோந்து கப்பலில் நேற்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் 60 மைல் நாட்டிகள் தூரம் இலங்கையைச் சேர்ந்த படகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து உடனடியாக கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, அந்த படகை மடக்கி பிடித்தனர். அப்போது, IMUL A-0635-NBO என்ற படகில் இலங்கை நீர் கொழும்பை சேர்ந்த விக்டர் இம்மானுவேல், ரஞ்சித், ஆண்டனி ஜெயராஜ் குரூஸ், பெனில் மற்றும் படகு ஓட்டுநர் ஆனந்தகுமார்,
ஆகிய 5 மீனவர்கள் இருந்தனர்.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 5 இலங்கை மீனவர்களையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர். படகையும், 6 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் தங்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி, தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், கடலோர காவல் குழும டிஎஸ்பி பிரதாபன் தலைமையிலான போலீசார், மற்றும் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இது தொடர்பாக தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 5 இலங்கை மீனவர்களையும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என காவல்துறையினர் தெரிவித்தனா்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026

    ருமேனியாவில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு: இருநாடுகளுக்குமிடையே முக்கிய கலந்துரையாடல்!

    October 27, 2026

    சவூதியின் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் காயம்!

    October 22, 2026

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்.

    October 17, 2026
    Editors Picks

    புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

    November 29, 2026

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026

    புரட்சிகர மக்கள் சக்தியின் 6ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு தலவாக்கலையில் சிறப்பாக நடைபெற்றது!

    November 29, 2026

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.