கொழும்பில் பிரபல வர்த்தகப் பெண்ணும் சின்னத்திரை தயாரிப்பாளருமான சுதர்மா ஜயவர்தன என்ற சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ஆர்.ராஜகுமாரியின் மரணம் பொலிஸ் காவலில் இறந்த சந்தேக நபர்களின் நீண்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட மற்றுமொரு மர்ம மரணமாகும்.
பொலிஸ் தாக்குதலில் இறந்தாரா? இது இன்னும் மர்மமாகவே உள்ளது.
இது தொடர்பான மருத்துவ அறிக்கைகள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று (24) நீதிமன்றத்தில் தெரியவரும்.
இந்த வழக்கு இன்று கொழும்பு அளுத்கடை நீதிமன்ற இலக்கம் 04 நீதவான் ஹர்ஷன கெகுனாவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் சார்பில், உயிரிழந்த பெண்ணின் சார்பில் அதன் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகவுள்ளது.

ராஜகுமாரிக்கு என்ன ஆனது?
பொலிஸ் காவலில் இறந்த ஆர்.ராஜகுமாரியின் கணவர் செல்லதூர் யேசுராஜ்யா.
பதுளை, தெமோதர பிரதேசம் இவர்களது வசிப்பிடமாகும். தொழிலாக அம்பாறை பிரதேசத்தில் உக்வத்தையில் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
யேசுராஜ் மற்றும் ராஜகுமாரி 7, 11 மற்றும் 13 வயதுடைய மூன்று குழந்தைகளின் பெற்றோர்.
இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனின் அன்பான தாயான ஆர்.ராஜகுமாரி இறக்கும் போது அவருக்கு வயது 41.
“எனது மனைவியின் மரணத்தால் நான் மிகவும் ஆதரவற்றவனாக இருக்கிறேன். மூன்று குழந்தைகளையும் வாழ வைக்க என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை” என யேசுராஜ் தெரிவித்திருந்தார்.
