தலவாக்கலை நகரில் சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் டிபீல்ட் நிறுவனத்தின் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் நுவரேலியா AYEVAC இளைஞர் குழு தலைமையில் சிறுவர்களுக்கு ஏதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காகவும், இளைஞர் யுவதிகள் மத்தியிலான போதை பொருள் பாவனையை குறைக்கும் முகமாகவும், புவி வெப்பமடைதல் பற்றிய தெளிவை வழங்கவும் மற்றும் பாலியல் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய தகவல்களை வழங்கவும் விழிப்புணர்வு நடை பேரணி மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் இன்று தலவாக்கலை நகரில் இன்று (27.05.23)நடைப்பெற்றது.

