லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்டராடோ தோட்டத்தில் அமைந்துள்ள சிறி கன்னிமாரியம்மன் பத்தினி ஆலயமும் லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள சிறி முத்துமாரி அம்மன் ஆலயமும் திருடர்களால் உடைக்கப்பட்டு சுமார் 370000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் ஒரு ஆலயத்திலும் 74000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் சிறி முத்துமாரி அம்மன் ஆலயத்திலும் கொள்ளையிடப் பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறி கன்னிமாரியம்மன் பத்தினி ஆலயத்தில் சாமி சிலைக்கு அணியப்பட்டிருந்த தாலி 3
தாலி பொட்டு 3
கண்மலர்கள் 2
மற்றும் ஆலயத்தில் உள்ள உண்டியல் 1
DVD player 1
எம்ப் 1
சுமார் 370000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தாலி 1,தாலி பொட்டு 1, உண்டியல் 1 ஆகியன ஆலயம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரையில் எவரேனும் கைது செய்யப்படாத போதிலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆலயத்தில் இன்று அதிகாலை பூசகர் சென்று பார்வையிட்ட போதே ஆலயம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
ராமு தனராஜா
