ஈராக்கின் தலைநகர் பக்தாத்திலுள்ள சுவீடன் தூதுவராலயத்துக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தூதுவராலயத்துக்கு தீவைத்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அண்மையில் சுவீடனில் அல்குரானை எரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர்.
எனினும் சுவீடன் தூதரகத்திலுள்ள பணியாளர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக சுவீடனின் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
