இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் படகு மூழ்கி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள பட்டன் சென்ட்ரல் ரீஜென்சியில் உள்ள லாண்டோ கிராமத்தில் இருந்து அருகிலுள்ள லாகிலி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த குறிதத படகு திங்கள்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தத்தின் போது 40 பயணிகள் படகில் இருந்தனர்.
அவர்களில் காணாமல் போன 19 பேரை அதிகாரிகள் தேடி வருவதாக இந்தோனேசியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆறு பயணிகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
