லிந்துலை பொலலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெயாவள் தோட்டத்தில் ஆறு பிள்ளைகளின் குடும்பத்தை சேர்ந்த தந்தை மது போதையில் வந்து தனது தாயாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார் குறித்த குழந்தையின் தாய் கொழும்பில் வீட்டு வேலை செய்து வருவதாகவும் 6 பிள்ளைகளும் பாட்டியின் அரவணைப்பிலேயே உள்ளதாகவும் பொலலிசார் தெரிவித்துள்ளனர்.
6 பிள்ளைகளின் தந்தையே தனது 6வது பிள்ளை மீது கொதி நீரை ஊற்றியுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரனைகளை லிந்துலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். கொதி நீரை பிள்ளை மீது ஊற்றிய நபர் பிரிதொரு வழக்கில் ஆஜராக நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாகவும் அவ்விடத்திலே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கௌசல்யா.

