கம்பளை குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்வில் தோட்டத்திலுள்ள குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வீடு எரிந்து சாம்பலானதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீப்பற்றிய சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்தவர்கள் தொழிலுக்கு சென்றிருந்ததுடன் சிறுவர்கள் உறவினர் வீடுகளுக்கு சென்றிருந்ததால் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
இதே தோட்டத்தின் மற்றொரு பகுதியிலும் வீடொன்று தீப்பற்றியுள்ளதாக கேள்விப்பட்டதை அடுத்து தீயை அணைப்பதற்காக மக்கள் பதறி ஓடிய காட்சிகள் செய்தியாளரின் கமராவில் பதிவாகின.
மக்களின் ஒத்துழைப்புடன் உரிய நேரத்தில் தீ பரவ முன்னரே அணைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
