கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட புசல்லாவை நயாபன தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 01/08/2023 அன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுஅதிபர் டி .கணேஷன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கம்பளை கல்வி வலய பணிப்பாளர் நிஹால் அழகக்கோன் அவர்களும் கோட்டமட்ட அதிகாரி கம்பளை கல்விவலயம் ஆர்.உமேஷானந்தனும் ,கம்பளை கல்வி கல்விவலயத்திற்கு உட்பட கல்வி அதிகாரிகள் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,பாடசாலையின் பெற்றோர்கள் ,மாணவர்கள் ,பழையமாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பாடசாலையில் தொடர்ச்சியாக கல்வி,விளையாட்டு ,கலை ,கலாசார போன்ற துறைகளில் திறமைகளை வெளிக்காட்டிய அனைத்து மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதேவேளை மாணவர்களாலும் ,பெற்றோர்களாலும் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர், மிக சிறப்பாக மாணவர்களின் நடன ,நாட்டிய ,பாடல் நிகழ்ச்சிகள் வந்தவர்களை கவரந்தன.
பாடசாலைக்கு பக்கபலமாக இருக்கும் பழையமாணவர்கள் அவர்கள் நடத்திய கிரிக்கட் போட்டியில் கிடைத்த பணத்தொகை மூலம் நிழற் பிரதி இயந்திரம் (போட்டோ கொப்பி) ஒன்றை அதிபர் மற்றும் உப அதிபரிடம் கையளித்தனர்.
நிகழ்வில் சிறப்பம்சமாக அன்மையில் சர்வதேச ரீதியில் ஊஸோ போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கும் மலையக மண்ணுக்கும் பெருமை சேர்த்த மணவானான கணேசன் சுதாகரன் கௌரவிக்கப்பட்டதோடு ,பழையமாணவர்களுக்குமான கௌரவிப்பும் இடம்பெற்றது. அதவேளை குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 09 மாணவி ஆசானியின் பாடல் தென்னிந்திய வரை பேசப்பட காரணமாக இருந்த வைரல் காணொளிக்கு மலையகம்.lk ஊடக நிறுவனத்துக்கும் கௌரவிப்பு ஒன்று பாடசாலை மூலம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு மதியநேர விருந்தோடு சிறப்பாக இனிதே நிறைவுபெற்றது.





