Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

October 16, 2026

வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

October 16, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

October 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » டயகம சௌமிய மூர்த்தி தொண்டமான் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடலும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும்
மலையகம்

டயகம சௌமிய மூர்த்தி தொண்டமான் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடலும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும்

ThanaBy ThanaAugust 6, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

டயகம சௌமிய மூர்த்தி தொண்டமான் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடலும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் அண்மையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் வரலாற்றைக் கொண்டுள்ள டயகம மேற்கு இலக்கம் 2 தமிழ் மகா வித்தியாலயம் என வழங்கப்பட்டு தற்போது டயகம சௌமிய மூர்த்தி தொண்டமான் கல்லூரியாக பரிணமித்து நிற்கும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்று சேர்க்கும் முகமாக முதன் முறையாக அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய 1997 ஆம் ஆண்டு முதல் அப்பாடசாலையிலிருந்து சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய சகல மாணவர்களையும் வகுப்பு வாரியாக ஒன்றிணைத்து மாபெரும் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் வகுப்பு வாரியாக மொத்தம் 20 அணிகள் கலந்துகொண்டன. ஒன்று கூடலை அடையாளப்படுத்தும் முகமாக டயகம நகரிலிருந்து கல்லூரி மைதானம் வரை நடை பவனியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் பின்னர் லீக்ஸ் சுற்று அடிப்படையில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்று அதில் வெற்றிபெற்று காலிறுதிக்கு பெற்ற 8 அணிகளிலிருந்து இறுதிப்போட்டிக்கு 2004 ஆம் ஆண்டு அணியும் 2012 ஆம் ஆண்டு அணியும் தகுதி பெற்றன. இதில் 2004 ஆம் ஆண்டு அணி வெற்றிபெற்று முதலாவது மாணவ ஒன்று கூடல் கிண்ணத்தை கைப்பற்றியது. 3 ஆம் இடத்தை 2015 ஆம் ஆண்டு அணி பெற்றுக்கொண்டது.

இக்கல்லூரியினால் வளர்க்கப்பட்ட சகல மாணவர்களையும் ஒன்றிணைத்து பாடசாலை சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பழைய மாணவர் சங்கத்தினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், இந்நாள் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026
    Editors Picks

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026

    ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குமாரின் போராட்டம் தொடர்கிறது

    October 16, 2026

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026

    வட்டவளையில் லொறியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

    October 16, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

    October 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.