டி.சந்ரு செ.திவாகரன்
நானுஓயா பிரதான நகரில் இன்று (07) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாக்குவாத சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த வியாபாரி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் வார்த்தகநிலையம் வாடகை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதலால் இந்த மோதல் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது
குறித்த சம்பவத்தில் கத்தியால் குத்தியவர்கள் சகோதரர்கள் எனவும் , இவர்கள் இருவரும் தானாகவே நானுஓயா நிலையத்தில் சரணடைந்ததாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
