நுவரெலியாவில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான விசேட நிகழ்ச்சித்திட்டம் நேற்று(07/07/2023) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது நேற்று நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நுவரெலியா மாவட்ட வலய கல்வி அதிகாரி திருமதி மங்களேஸ்வரி தலைமையில் இடம்பெற்றது.
கோவிட் தொற்றுக்கு பிறகு இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் நுவரெலியா கல்விவலயத்துக்கு உட்பட பாடசாலைகளில் இனங்காணப்பட்ட 200 மேற்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களை ஊக்கப்படுத்தி மகிழ்ச்சி படுத்தும் விதமாக குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் கல்வி அதிகாரிகள் ,ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.













