மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.09.08.2023.
நோட்டன் பிரதான வீதியில் இன்று மாலை 5.30 மணிக்கு முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்ததால் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதான வைத்திய சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கிளங்கன் ஆதார வைத்திய சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரி கூறுகையில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த நான்கு இளைஞர்களும் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் நோட்டன் பகுதியில் உள்ள முருத்ததென்ன தோட்டத்தில் மரண வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து உள்ளது எனவும் இவர்கள் அனைவரும் மது போதையில் இருந்தனர் என கூறினார்.
மேலதிக விசாரணைகள் தொடந்து இடம் பெற்று வருகிறது.

