மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.13.08.2023.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உரித்தான சாமிமலை நகரில் பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளதாக பொது மக்கள் பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில் பொது கழிப்பறை ஆண் பெண் இருபாலாருக்கும் உள்ள கழிவறையில் உள்ளே செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் அவ்வாறு உள்ள கழிவறையில் கதவுகள் இல்லை முற்றிலும் மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளதாகவும் அதனை சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும்.
இது சம்பந்தப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபை முன் வந்து உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



