ஊவா பரணகம ரத்தம்ப தியகொலார ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (13) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா கந்தபொல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (13) மாலை தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்த இளைஞன் தனது உறவினருடன் ஆற்றுக்குச் நீராட சென்ற நிலையில், ஆற்றில் குதித்து நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து இளைஞனை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இளைஞன் மீட்கப்பட்டு
வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இளைஞன் ஏற்கனவே உயிரிழந்தனர் உயிரிழந்து விட்டதாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது ஊவா பரணகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில், அம்பகஸ்தோவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்
