வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
கொடியேற்றத்துடன் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா அடுத்த மாதம் 14 ஆம் திகதி வரை தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருவிழாவை முன்னிட்டு ஆலய சுற்றுவீதிப்பகுதியில் நேற்று காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த போக்குவரத்து ஏற்பாடுகள் அடுத்த மாதம் 16ம் திகதி வரை அமுலில் இருக்குமென யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது
