சாதாரண தர பரீட்சையில் 2019.2020.2021 ஆண்டுகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டுவிழா இன்று (19/12/22) இடம்பெற்றுது.
கிராமிய தோட்ட அபிவிருத்தி மன்றம், நாமகள் ஐக்கிய இளைஞர்,விளையாட்டு கழகங்களின் ஏற்பாட்டில் ஸ்டொக்ஹோம் மைதானத்தில் நடைபெற்றது.
மன்றத்தின் ஸ்தாபகர் மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஜோர்ஜ் கேசவன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்ணிட்டு அவரின் உருப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, எட்டு அணிகள் பங்கு பற்றிய கரப்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்கள் ஊர்வலமாக வரவேற்கப்பட்டதோடு அவர்களின் பெற்றோர்களையும் நிகழ்வில் மாலை அணிவித்து அவர்களின் பிள்ளைகளையும் நினைவு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
பாரதி தமிழ்வித்தியாலயத்தின் அதிபர் வாசுதேவன், அம்பகமுவ செயலக பிரிவின் விளையாட்டு அதிகாரி அரவிந்த மற்றும் இளைஞர் சேவைகள் அதிகாரி கனகராஜ், நோர்வுட் பொலிஸ்உத்தியோகஸ்தர் குமார், சமூக நிறுவனங்களின் பிரதநிதிகளான மோகன். ரஜனிகாந்த், திருமதி.மைதிலி, திருமதி சுலோசனா, மன்றத்தின் தலைவர்திருமதி.பத்மா, திருமதி .சுமதி, .சிவச்சந்திரன், திருமதி.தவமலர். ரவீந்திரன்ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேலும் நிகழ்வில் கிராமிய தோட்ட அபிவிருத்தி மன்றத்தின் பிரதி தலைவரும் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினருமான.சுரேஸ்குமார். உட்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.