மலையக அரசியல் அரங்கம் 5-வது ஆண்டு நிறைவு விழாவும், 3-வது போராளர் மாநாடும் பதுளையில்*
மலையக அரசியல் அரங்கம் (MPA) தனது 5-வது ஆண்டு நிறைவு விழாவையும், 3-வது “போராளர்” மாநாட்டையும் எதிர்வரும் நவம்பர் 28-ஆம் திகதி, 2026 அன்று பதுளையில் கொண்டாடவுள்ளது.
5 ஆண்டுகளை குறிக்கும் வகையில், மலையக முன்னோடிகளை நினைவுகூர்ந்து 5 அமர்வுகளாக, *”ஐந்து அரங்குகள்”* என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு இடம்பெறும் என அதன் நிறுவுனர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
இம்மாநாடு பதுளை நகரில் உள்ள ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில், காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு மலையக அரசியல் அரங்கத்தின் நிறுவுனர் தலைமை தாங்கவுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக மலையக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் இந்த அமைப்பின் பயணத்தை நினைவுகூரும் வகையிலும், எதிர்கால அரசியல் பயணம் குறித்து தீர்மானங்களை எடுக்கும் வகையிலும் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.
மாநாட்டில், மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேராளர்கள், அரசியல் களப் போராளிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா மாகாணத்தில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறித்து பலரும் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்துள்ளமை, நிகழ்வுக்கு மேலும் சிறப்பை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*செய்தி: தலவாக்கலை குணா*
