2022 (2023) ஆண்டில் உயர்தரப் பரீட்சையில், சமுதிதா நயனப்ரியா பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அந்த மாணவன் காலி ரிச்மண்ட் கல்லூரி மாணவன் ஆவார்.
இதேவேளை, கொழும்பு சிறிமாவோ மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் வர்த்தகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
அதன்படி இவ்வருடம் வர்த்தகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை அந்தக் கல்லூரியைச் சேர்ந்த தில்சராணி தருஷிகா பெற்றுள்ளார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி உயிரியல் பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி ஒருவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் உயிரியல் பிரிவில் பிரமுதி பஷானி முனசிங்க என்ற மாணவி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
2022 (2023) உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவன் பௌதீகவியல் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதன்படி, பௌதீகவியல் பிரிவில் கோனதுவகே மனெத் பானுல பெரேரா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.