அவிசாவளை கொழுப்பு பிரதான பாதையின் புவக்பிட்டிய கிரியந்தல பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை 08 மணி அளவில் இடம்பெற்றுள்ளதோடு போக்குவரத்துக்கும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிரதேச பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யூகேஷ்

