லிபியாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை கடந்துள்ளது.
லிபியாவின் தரைக்கடல் நகரத்தில் மாத்திரம் மூவாயிரத்து 840 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 400 பேர் சூடான் மற்றும் எகிப்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இதுவரை ஆயிரக்கணக்கானோர் லிபியாவிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் லிபியாவிற்கு 5 இலட்சம் ஐரோப்பிய யூரோக்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
இத்தாலி லிபியாவிற்கு பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்பு படையினரை தாங்கிய மூன்று கப்பல்களை அனுப்பியுள்ளது.