கொங்கோ ஜனநாயகக் குடியரசின் வடமேற்குப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த அனர்த்தம் ஞாயிற்றுக்கிழமை (17) மொங்காலா மாகாணத்தில் உள்ள லிசல் நகரில் உள்ள காங்கோ ஆற்றங்கரையில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட வீடுகளில் வசித்து வந்தவர்கள் ஆவர்.
கடந்த ஏப்ரலில் கொங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தின் லுபெரோ பகுதியில் ஏற்பட்ட பல மண்சரிவுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
