கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம் – பட்டிருப்பு – மண்டூர் அருள்மிகு முருகன் திருக்கோயில்
நம்பிக்கை தந்து வாழ்வை வளப்படுத்தும் பெருமானே
நிம்மதியைத் தந்திடுவாய் நிலை தளம்பா வளமளிப்பாய்
என்றும் உடனிருப்பாய் வாழ்வில் வளம் தருவாய்
மண்டூர் பதியமர்ந்த மாமணியே வேல்முருகா
வேழமுகம் கொண்டவனின் இளையவனே பெருமானே
வேதனைகள் தடுத்திடுவாய் வெற்றிதந்து வளமளிப்பாய்
என்றும் உடனிருப்பாய் வாழ்வில் வளம் தருவாய்
மண்டூர் பதியமர்ந்த மாமணியே வேல்முருகா
கிழக்கிலங்கை கோயில் கொண்டு குலம் காக்கும் பெருமானே
கிலேசம் அகற்றிடுவாய் எழுச்சியையும் தந்திடுவாய்
என்றும் உடனிருப்பாய் வாழ்வில் வளம் தருவாய்
மண்டூர் பதியமர்ந்த மாமணியே வேல்முருகா
வேல் தாங்கி நின்றிருந்து அருள் பொழியும் பெருமானே
வெற்றிமுகம் காட்டிடுவாய் வீண்பகைமை நீக்கிடுவாய்
என்றும் உடனிருப்பாய் வாழ்வில் வளம் தருவாய்
மண்டூர் பதியமர்ந்த மாமணியே வேல்முருகா
மயிலேறியுலகளந்த மாதவனே பெருமானே
மானம் காத்திடுவாய், மதிப்பை உயர்த்திடுவாய்
என்றும் உடனிருப்பாய் வாழ்வில் வளம் தருவாய்
மண்டூர் பதியமர்ந்த மாமணியே வேல்முருகா
ஆறுபடை வீடு கொண்ட அண்ணலே பெருமானே
ஆறுதலைத் தந்திடுவாய், அரவணைத்துக் காத்திடுவாய்
என்றும் உடனிருப்பாய் வாழ்வில் வளம் தருவாய்
மண்டூர் பதியமர்ந்த மாமணியே வேல்முருகா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.