மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம் அவிசாவளை ஹங்வெல்ல – அருள்மிகு அங்காளப் பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்
உற்ற துணையிருந்தெமது நலன் காக்கும் தாயே
உடனிருந்து என்றும் எம்குறைகள் தீர்க்கவருவாய்
நம்பியுன்னடி பணியும் எங்கள் குரல் கேட்பாய்
ஹங்வெல்லயில் கோயில் கொண்ட அங்காளப் பரமேஸ்வரி அம்மா
மேற்கிலங்கை இருந்தெமது நலன் காக்கும் தாயே
மேன்மைபெற்று நாம்வாழ என்றும் அருள் தருவாய்
நம்பியுன்னடி பணியும் எங்கள் குரல் கேட்பாய்
ஹங்வெல்லயில் கோயில் கொண்ட அங்காளப் பரமேஸ்வரி அம்மா
பெருந்தெருவின் அருகினிலே காட்சி தரும் தாயே
பெருமையுடன் நாம்வாழ உடனிருந்து வழியமைப்பாய்
நம்பியுன்னடி பணியும் எங்கள் குரல் கேட்பாய்
ஹங்வெல்லயில் கோயில் கொண்ட அங்காளப் பரமேஸ்வரி அம்மா
கேட்கும் வரம் தந்தெம்மை மகிழ்விக்கும் தாயே
கவலைகள் அண்டாநிலை தந்து நலமளித்து வாழவைப்பாய்
நம்பியுன்னடி பணியும் எங்கள் குரல் கேட்பாய்
ஹங்வெல்லயில் கோயில் கொண்ட அங்காளப் பரமேஸ்வரி அம்மா
விழிமலர்ந்து வீற்றிருந்து வேதனைகள் போக்கும் தாயே
வெல்லும் வழிகாட்டி என்றும் வெற்றிகளைத் தந்தருள்வாய்
நம்பியுன்னடி பணியும் எங்கள் குரல் கேட்பாய்
ஹங்வெல்லயில் கோயில் கொண்ட அங்காளப் பரமேஸ்வரி அம்மா
வாழ்வினையே சீர்செய்து வளமளிக்கும் எம் தாயே
வளமான எதிர்காலம் தந்து எம்மை வாழச் செய்வாய்
நம்பியுன்னடி பணியும் எங்கள் குரல் கேட்பாய்
ஹங்வெல்லயில் கோயில் கொண்ட அங்காளப் பரமேஸ்வரி அம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.