மானுடவெளி அமைப்பு “பொது சமையலறை” ஒருவரின் பசியை போக்கி உங்கள் இதயத்தை நிரப்புங்கள் எனும் தொனிப்பொருளில், இரண்டாவது தடவையாக (24/12) சென்லெனாட்ஸ் கொனிக்கார் பிள்ளையார் தமிழ் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்த மதிய போசன மற்றும் கலை, கலாச்சார நிகழ்வில் எண்பதுக்கும் மேற்பட்ட முதியோர்கள் பங்கு பற்றி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
அந்த வகையில் தாலாட்டு பாடல், கும்மிப்பாடல், தங்களின் பழங்கால அனுபவங்கள், தங்கள் ஊரின் இன்றைய நிலை போன்ற நல்ல பல விடயங்களை பகிர்ந்துக்கொண்டார்கள். அதுமட்டுமல்லாது தங்கள் தங்களின் பழைய சிநேகிதகங்களையும் புதுப்பித்துக்கொண்டார்கள்.
களைப்பில் இருந்தவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது பின், சுத்தமான முறையில் சமைக்கப்பட்ட பகல் உணவும் வழங்கப்பட்டது. “கொடுப்பதில் கடவுளுக்கு அடுத்தபடி ஒருசில மனிதர்கள் மட்டுமே. உங்களின் பணி தொடரவேண்டும். ஆண்டவன் அருள்புரிய வேண்டும்” என்று வாழ்த்தி மகிழ்ந்து சென்றார்கள். ஊரிலுள்ள இளைஞர்கள் பலரும் முன்வந்து தங்களின் ஒத்துழைப்பை நல்கினர்.
பல முதியோர்கள் கைவிடப்பட்ட நிலையில், கவனிக்கப்படாமல் இருக்கும் நிலையில் இது போன்ற உன்னதமான நிகழ்வுகள் பரந்து செயல்பட மலையக இளைஞர்கள் முன்வரவேண்டும்.
மானுட வெளி அமைப்பின் அடுத்தகட்ட நிகழ்வு வரும் ஜனவரி முதலாம் திகதி சென்லெனாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மலையகம் செய்திகளுக்காக ராகலையிலிருந்து சசிசரண்.