இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகளுக்கு இடையிலான தாக்குதல் புதன்கிழமை (11) ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.
சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த தாக்குதலினால் இஸ்ரேலில் 14 அமெரிக்கர்கள் உட்பட 1,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அதேநேரம், காசாவில் 900 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.