அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 50 முதல் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய துப்பாக்கிதாரியை தேடி விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
