கந்தப்பளை பார்க் தோட்டத்தை சேர்ந்த கரப்பந்தாட்ட அணியினர் இலங்கை வியாபார நிறுவனங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டியில் மலையகத்தை பிரதிநிதிதத்துவப்படுத்தி விளையாடி தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.
அத்தோடு அவ் அணியின் வீரர்ஸ்ரீ பரத் என்பவர் இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .அணியினரை பெருமைப்படுத்தும் முகமாக கந்தப்பளை நகரில் வாகன பேரணியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. தமது திறமையால் மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்த அணியினரை வாழ்த்துவோம்.
தகவல் – மு.ராம்கி

