ஹமாஸ் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய, நான்கு நாட்கள் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இருதரப்பிலும் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
