வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – மானிப்பாய் – தாவடி அருள்மிகு அம்பலவாணப் பிள்ளையார் திருக்கோயில்
அம்பலத்தில் ஆடுகின்ற சிவனாரின் திருமகனே
அல்லல் களைந்துலகைக் காத்தருள வேண்டுமைய்யா
ஆதரித்து அரவணைத்துக் காத்திடவே வாருமைய்யா
தாவடியில் கோயில் கொண்ட அம்பலவாணப் பிள்ளையாரே சரணமைய்யா
உயிரினுள் உயிராக உள்ளுறையும் சிவனாரின் திருமகனே
பஞ்சம் அகற்றியுலகைக் காத்தருள வேண்டுமைய்யா
பசியகற்றி அரவணைத்துக் காத்திடவே வாருமைய்யா
தாவடியில் கோயில் கொண்ட அம்பலவாணப் பிள்ளையாரே சரணமைய்யா
எங்கும் எதிலும் உறைகின்ற சிவனாரின் திருமகனே
எல்லாக் கவலைகளும் களைந்துலகைக் காத்தருள வேண்டுமைய்யா
ஆறுதலைத் தந்தென்றும் காத்திடவே வாருமைய்யா
தாவடியில் கோயில் கொண்ட அம்பலவாணப் பிள்ளையாரே சரணமைய்யா
அண்டத்தை ஆட்டுகின்ற சிவனாரின் திருமகனே
அச்சம் அகற்றியுலகைக் காத்தருள வேண்டுமைய்யா
அதர்ம வழி தவிர்த் தென்றும் காத்திடவே வாருமைய்யா
தாவடியில் கோயில் கொண்ட அம்பலவாணப் பிள்ளையாரே சரணமைய்யா
முக்கண்ணைக் கொண்டருளும் சிவனாரின் திருமகனே
மூர்க்க குணம் அடக்கியுலகைக் காத்தருள வேண்டுமைய்யா முத்தமிழுக்கு வளம் தந்தென்றும் காத்திடவே வாருமைய்யா
தாவடியில் கோயில் கொண்ட அம்பலவாணப் பிள்ளையாரே சரணமைய்யா
தென்திசையில் இருந்தருளும் சிவனாரின் திருமகனே
தொல்லை களைந்துலகைக் காத்தருள வேண்டுமைய்யா
தெளிவான மனம் தந்தென்றும் காத்திடவே வாருமைய்யா
தாவடியில் கோயில் கொண்ட அம்பலவாணப் பிள்ளையாரே சரணமைய்யா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.