சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகள், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகள், கல்லூரிகளுக்கு கடந்த 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் விடுமுறை விடப்பட்டிருந்தது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால், மாணவா்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும் (8) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
