கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம், திருக்கோயில், கள்ளியந்தீவு அருள்மிகு ஸ்ரீசகலகலையம்மன் திருக்கோயில்
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அருளுகின்ற தாயே
ஆதரித்து அறிவளித்து அருள் தரவே கருணையை நீ செய்வாய்
உன்னருளால் இவ்வுலகம் உய்திபெற வேண்டும்
கள்ளியந்தீவு கோயில் கொண்ட சகலகலை அம்மா உன்தாள் போற்றி
கிழக்கிலங்கை கோயில் உறை கலைத் தாயே
கிட்டிவந்து அருகிருந்து அருள் தரவே கருணையை நீ செய்வாய்
உன் கருணை இவ்வுலகைக் காத்தருள வேண்டும்
கள்ளியந்தீவு கோயில் கொண்ட சகலகலை அம்மா உன்தாள் போற்றி
அறிவுதந்து வழிநடத்தி வாழவைக்கும் தாயே
அச்சமின்றி வாழ்வதற்கு அருள் தரவே கருணையை நீ செய்வாய்
உன்காவல் இவ்வுலகைக் காத்தருள வேண்டும்
கள்ளியந்தீவு கோயில் கொண்ட சகலகலை அம்மா உன்தாள் போற்றி
தாயாகக் கருணை செய்து காத்தருளும் தாயே
தவறில்லா வாழ்வுதர கருணையை நீ செய்வாய்
உன் பார்வை உலகினையே காவல் செய்ய வேண்டும்
கள்ளியந்தீவு கோயில் கொண்ட சகலகலை அம்மா உன்தாள் போற்றி
அம்பாறை தமிழ் மண்ணில் வீற்றிருக்கும் தாயே
அமைதியெங்கும் நிலவிடவே கருணையை நீ செய்வாய்
உன் சக்தி இவ்வுலகை வளம் செய்ய வேண்டும்
கள்ளியந்தீவு கோயில் கொண்ட சகலகலை அம்மா உன்தாள் போற்றி
வாழவழியமைத்து எம்மை வாழச் செய்யும் தாயே
மனவலிமை பெற்றிடவே கருணையைநீ செய்வாய்
உன் ஆசி இவ்வுலகை ஆட்சி செய்ய வேண்டும்
கள்ளியந்தீவு கோயில் கொண்ட சகலகலை அம்மா உன்தாள் போற்றி.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.