வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம், புத்தளம் – அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில்
புத்தளம் நகரமர்ந்து வழித்துணையாய் இருப்பவரே
புதிய வழிகாட்டி யெம்மை மீட்சிபெறச் செய்யுமைய்யா
புத்துணர்வு பெற்று நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு
ஏற்ற துணையிருப்பாய் எங்கள் சித்திவிநாயகரே
அருள் வழங்க வீற்றிருந்து வழித்துணையாய் இருப்பவரே
ஆற்றலுடன் செயற்பட்டு முன்னேறச் செய்யுமைய்யா
ஆதரவைப் பெற்று நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு
ஏற்ற துணையிருப்பாய் எங்கள் சித்திவிநாயகரே
மேற்கிலங்கை கோயில் கொண்டு வழித் துணையாய் இருப்பவரே
மேன்மை நிறை வாழ்வு பெற்று மகிழ்வு பெறச் செய்யுமைய்யா
முன்னேறும் வழிபெற்று நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு
ஏற்ற துணையிருப்பாய் எங்கள் சித்திவிநாயகரே
எங்கும் வந்தமர்ந்து வழித்துணையாயிருப்பவரே
ஏற்றம் நிறை அறிவு பெற்று உயர்வு பெறச் செய்யுமைய்யா
உயர்ந்த நிலை பெற்று நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு
ஏற்ற துணையிருப்பாய் எங்கள் சித்திவிநாயகரே
செல்லும் வழியெங்கும் வழித்துணையாய் இருப்பவரே
சூழ்நிலைகள் யாவையுமே சுகம் பெறச் செய்யுமைய்யா
சூழ்ச்சிகள் நெருங்காமல் நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு
ஏற்ற துணையிருப்பாய் எங்கள் சித்திவிநாயகரே
புத்தொளி பரப்பியென்றும் வழித்துணையாய் இருப்பவரே
மதிநிறைந்து புலமை பெற்று எழுச்சி பெறச் செய்யுமைய்யா
மானம் நிறை வாழ்வு பெற்று நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு
ஏற்ற துணையிருப்பாய் எங்கள் சித்திவிநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.