Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

August 12, 2026

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

August 12, 2026

கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

August 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு
Breaking

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு

ThanaBy ThanaJanuary 28, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை 2024 பெப்ரவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மாணவ, மாணவிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில் ஜனாதிபதி ரணில் விகரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும், கற்கும் திறன் கொண்ட, ஆனால் பொருளாதாரச் சிரமங்களுள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி நிதியம் இந்த புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

2021/2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் இதுவரை 10 மாதாந்த தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, புலமைப்பரிசில் தொகை அதிகரிப்புடன், 2024 பெப்ரவரி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 6,000 ரூபா மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் 2022/2023 ஆண்டு தொடர்பாக க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் தேர்ச்சி பெற்ற 5,000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அந்த மாணவர் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை மாதாந்தம் ரூ. 6000 தொகையை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன்படி, இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் தற்போது பிராந்திய மட்டத்தில் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தெரிவுகள் நிறைவடைந்தவுடன் உரிய மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான புதுப்பிக்கப்படும் தகவல்களை எதிர்காலத்தில் அறிந்து கொள்வதற்கு , ஜனாதிபதி நிதியத்தின் www.facebook.com/president.fund என்ற உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை மற்றும் உத்தியோகபூர்வ YouTube சேனலான www.youtube.com/@PresidentsFund ஐ like/follow அல்லது subscribe செய்யுமாறும் www.presidentsfund.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026
    Editors Picks

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026

    மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..

    August 12, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.