நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த 2023 ஆம் ஆண்டு பிரிவு 3 கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி Ginigathena CC மற்றும் Summarahill CC அணிகளுக்கு இடையில் கடந்த (11)ஞாயிற்றுக்கிழமை DMCC மைதானத்தில் நடைபெற்றது.
Summarahill CC டாஸ் வென்று களத்தடுப்பை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய Ginigathena CC அணி 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றது. தீக்ஷன 130 ஓட்டங்களையும் ஷனக லக்ருவன் 71 ஓட்டங்களையும் சானக 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Summarahill CC அணி 38.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது Ginigathena CC அணி 107 ஓட்டங்களால் வெற்றி பெற்று சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. Summarahill CC அணி சார்பில் மனோஜ் 39 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் ஷனக லக்ருவான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
போட்டியின் நாயகனாக Ginigathena CC வீரர் தீக்ஷனவும் தொடரின் நாயகனாக Summarahill CC வீரர் சானுகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
பரிசளிப்பு விழாவில் நுவரெலியா மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர், உதவி செயலாளர், உப தலைவர்கள் மற்றும் குழு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
