பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளனர்.
டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் செயல்பட்டு வந்த
உணவகத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ அனைத்து பகுதிகளுக்கும் பரவிய நிலையில்
35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் சிக்கிய 75 பேரை உயிருடன் மீட்ட நிலையில் இந்த தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 22 பேர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
