எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பண்டிகைக் காலத்திற்காக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் குறைக்கப்பட்டுள்ளது. இது நான்காவது தடவையாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (09) முதல் இந்தப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, அரசுக்கு சொந்தமான ஒரேயொரு பல்பொருள் அங்காடி சங்கிலியான லங்கா சதொச அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.
அதன்படி,
- ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ரூ.850.00,
- ஒரு கிலோ பி வெங்காயம் (சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது) ரூ.375.00,
- ஒரு கிலோ பி வெங்காயம் (இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது) ரூ.445.00,
- ஒரு கிலோ வெங்காயம் (இறக்குமதி) பாகிஸ்தானில் இருந்து) ரூ.445.00,
- ஒரு கிலோ வெள்ளைப்பூடு ரூ.680.00,
- பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ.165.00,
- சிவப்பு பருப்பு ஒரு கிலோ ரூ.298.00, மற்றும் ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி ரூ. 189.00 ஆகவும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
