இரத்தினபுரி சூரியகந்த புலுதொட்ட பல்லபெந்த வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்(14) இருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேற்குறிப்பிட்ட வீதியில் தனியார் பேருந்து ஒன்றில் உந்துருளி ஒன்று மோதியதில் உந்துருளியில் பயணித்த இருவருமே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்பத்தில் மழை பெய்ததால் உந்துருளியில் பின்னால் பயணித்த நபர் குடையை விவரித்துள்ளார் கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக உந்துருளியை செலுத்தியவருக்கு வீதி சரியாக விளங்கவில்லை என உந்துருளியில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.இதனால் பேரூந்துடன் மோதியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
M.F.M.Ali
