Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

August 16, 2026

கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

August 16, 2026

அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

August 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மறைந்த ரெஜி ரணதுங்க அவர்களின் 16வது நினைவு தினம் இன்று
இலங்கை

மறைந்த ரெஜி ரணதுங்க அவர்களின் 16வது நினைவு தினம் இன்று

ThanaBy ThanaMay 30, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மறைந்த ரெஜி ரணதுங்க அவர்களின் 16வது நினைவு தினம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான மறைந்த ரெஜி ரணதுங்கவின் 16 வது நினைவு தினம் இன்று (30) உடுகம்பலவில் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது.

உடுகம்பலையில் அமைந்துள்ள ரெஜி ரணதுங்கவின் நினைவிடத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது உறவினர்கள் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி உடுகம்பலையில் பிறந்த ரெஜி ரணதுங்க, மினுவாங்கொடை நாலந்தா கல்லூரி, நீர்கொழும்பு ஹரிச்சந்திரா கல்லூரி மற்றும் கோட்டே ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்றார். அவர் ருமேனிய குடியரசு பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் பட்டம் பெற்றார்.

1962ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான ரெஜி ரணதுங்க, 1989ஆம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். 1994 தேர்தலின் பின்னர் போக்குவரத்து, சுற்றாடல் மற்றும் சுகாதார பிரதி அமைச்சராக பதவியேற்ற திரு. ரெஜி ரணதுங்க, துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சராகவும், துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும் சீர்திருத்தங்கள் பிரதி அமைச்சராகவும் சிவில் விமான போக்குவரத்து, உணவு மற்றும் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தேசிய கைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் ரணதுங்க பணியாற்றியுள்ளார்.

நந்தனி ரணதுங்கவை மணந்த ரெஜி ரணதுங்க ஆறு பிள்ளைகளின் தந்தையாவார். தற்போதைய ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான அர்ஜுன ரணதுங்க ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், பிரதேச மக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026
    Editors Picks

    நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

    August 16, 2026

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026

    நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

    August 16, 2026

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.