இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார ஊடகத்துறை அமைச்சின், பதில் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குனவர்தன அவர்கள் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள காரணத்தினால், அவர் மீண்டும் நாட்டை வந்தடையும் வரை, பதில் ஊடகத்துறை அமைச்சராக, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நியமிக்கப்படடுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
