கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மாணவி ஒருவரின் சடலம் கொழும்பு 7 குதிரை பந்தைய திடலில் இன்று (ஜன 17) கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர் 23 வயதுடையவர் எனவும் அவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட விஞ்ஞானபீட மாணவியான இவரின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.